Monday, 26 March 2012

உணர்வு

மூச்சாய்க் கலந்தவள்
முரண்பாட்டுக் கவியவள்
இலவஞ் செடியவள்
வெண்ணிலவின் வருகைக்காக
உயிர் கொண்டு
காத்திருக்கிறேன்..!
என் உணர்வுக்கு
உயிர் தந்து செல்வாயா...
 



 

Tuesday, 3 January 2012

அருவி

நான் சத்தமின்றி அழுகிறேன் 
இருந்தும் 
சலனமின்றி 
இருக்க 
முடிவதில்லை...



Tuesday, 6 December 2011

நினைவுகள்...

கூதல் எனை கொள்கையிலே 
உன் நினைவு சருகுகளை 
மூட்டி குளிர் காய்கிறேன்.
பெண்ணே 
உந்தன் நினைவு 
என்னுரின் ஓரங்களையும்
கொல்கிறது...



Monday, 5 December 2011

கனவு

கனவுவென்ற கால வெள்ளத்தில் 
இலக்கின்றி பயணிக்கிறேன் 
இருந்தும் 
பொருளற்றவன் ஆகிறேன் 
என்னருகே பெண்ணே நீ இல்லாமல் ....



Tuesday, 29 November 2011

திருநங்கைகள்

பிரம்மன்னின் படைப்பில்
எழுத்து பிழைகள் 
திருநங்கைகள் !!!



Wednesday, 23 November 2011

திருமணம்



ஆகாய பந்தலில்
அகிலத்தின் வாசலில்
கருமேகம் முழங்க
மழை பூத்தூவ
மின்னல் படமெடுக்க 
விண்ணுலகில் 
வெண்ணிலவின் 
திருமணமோ !!!




Monday, 21 November 2011

காதல்

ஜென்மம் தீர்ந்தாலும் 
ஜீவன் நீத்தாலும் 
காலங்கள் பல கடந்தாலும் 
காதல் 
அழிவதில்லை