Tuesday, 29 November 2011

திருநங்கைகள்

பிரம்மன்னின் படைப்பில்
எழுத்து பிழைகள் 
திருநங்கைகள் !!!



Wednesday, 23 November 2011

திருமணம்



ஆகாய பந்தலில்
அகிலத்தின் வாசலில்
கருமேகம் முழங்க
மழை பூத்தூவ
மின்னல் படமெடுக்க 
விண்ணுலகில் 
வெண்ணிலவின் 
திருமணமோ !!!




Monday, 21 November 2011

காதல்

ஜென்மம் தீர்ந்தாலும் 
ஜீவன் நீத்தாலும் 
காலங்கள் பல கடந்தாலும் 
காதல் 
அழிவதில்லை



Sunday, 20 November 2011

உறவுகள்

ரயில் பயணங்களில்
சிநேகிதம் பாராட்டும் நம்மில் 
பலர் 
தொலைதூர வாழ்க்கை பயணத்தில் 
உறவுகளின் உன்னதத்தை உணராமல் 
தொலைத்து விடுகிறோம்
நினைவுகள் மட்டுமே
இன்று
நெஞ்சில் பாரமாய் !!!



Thursday, 17 November 2011

விதை

ஈழத்தமிழர்களின் சொல்ல வொன்னா துயரங்கள்
அங்கே புதைக்கபடுவதில்லை 
விதைக்கப்பட்டுள்ளது .
அறுவடை நாளுக்காக 
அனைவரும் 
காத்திருகின்றோம் !!!





Monday, 14 November 2011

தாய்மை

தாய்மை என்றுமே 
தன்னலமற்றது 
உன்னிடம் பேசியதை விட 
உன்னக்காக அவள் பேசிய நாட்கள் 
சொல்லும் தாய்மையின் 
பெருமையை .


Friday, 11 November 2011

வெட்கம்

அந்தி வானமும்
சிவக்க தான் செய்கிறது 
ஆனால்
என்னவளின் 
வெட்கத்திற்கு 
இணையாக 
இல்லை!!!



நிலா

வான் மகள் 
இட்டு கொண்ட 
வட்ட பொட்டு
தானோ இந்த 
நிலவு !!!



வாழ்க்கை


வாழ்கை யாவருக்கும் ஒன்று போல் அமைவதில்லை 
ஏற்ற இறக்கம் வாழ்வியல் நியதி 
நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும் 
நடப்பவைகள் நல்லனவாக ஒளிரட்டும் 
வலிகளில் இருந்து விடுபடுங்கள் 
இனி என்றும்
உங்கள் விழி தடங்கள் எங்கும்
வழி தடங்கள் ஆகட்டும் !!!!



காதல்


தொடு வானம் 
தொட்டு விடும் 
தூரம் தான்
எனக்கு
நீ
என்னுள் 
கலந்த(கரைந்த) பிறகு !!!


Thursday, 10 November 2011

தாய்


கருவறையில் உன்னை சுமந்தவளை 
நீ இன்று சுமை என்று கருதுகிறாய் 
என்று உணர்வாய்
நீர் சூழ்ந்த உலகம் உன்னது 
நீ சூழ்ந்த உலகம் அவளது என்று !!!



நினைவுகள்

தண்ணீரால் அழிக்க முடியாதென 
கண்ணீரால் அழிக்க முயற்சிக்கிறேன் 
உன் நினைவுகளை ....



வர்மம்

நோக்கு வர்மம்
உன்னிடம் இருந்து
உயிர் பெற்றதோ 
என் உயிரே !!!



காதலி



நீ இல்லாத நாட்கள் 
தனிமையாய்

நீ இல்லாத இடங்கள் 
வெறுமையாய்

நாட்கள் நரகமாய் நகர
மறுகின்றதே

நீ இல்லாத நான்
என்றுமே முழுமை பெறுவதில்லை !!!!





இரவுகள்

நீ இல்லாத இரவுகள் 
என்றுமே விடிவதில்லை



இதழ்கள்

மலர்கள் மொட்டாவதும் 
மலர்வதும் 
உன்
இதழ்களில்
மட்டுமே
சாத்தியம்!!!!!